43 வயதான ஹேரத் கொவிட் தொற்று நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந் நிலையில் ஹேரத் குணமடைந்து, தனது 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணியில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஹேரத் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், நான் மீண்டும் குழுவுடன் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதே சமயம் இரண்டு வார தனிமைப்படுத்தல் எனக்கு கடினமாக இருந்தது, ஆனால் நான் திரும்பி வந்து சுற்றுப்பயணத்தை எதிர்நோக்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேநேரத்தில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் வைத்தியர்கள் குழாம் என்னை நன்றாக கவனித்துக்கொண்டதால் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்