இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.இப்படத்தில் அஜித் பொலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இப்படம் வருகிற பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகவுள்ளது.
இப்படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குனர் வினோத் ‘மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஒரு பைக் ரேசருக்கு நேரிடையாக எஸ்.ஐ பணி கொடுத்தார்.அதை இன்ஸ்பிரேஷனாக கொண்டே அஜித்தின் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.ஒரு புரபஷனல் பைக் ரேசர் பொலீஸ் அதிகாரியாக மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் அஜித்தின் வேடம்’ என தெரிவித்தார்.
மேலும்,வலிமை படத்தின் கதை வேறு எந்த ஹீரோவை மனதில் வைத்தும் நான் உருவாக்கவில்லை.வலிமை கதையை எழுதிய பின் அஜித்துக்காக சில மாற்றங்களை செய்தேன் என தெரிவித்தார்.ஒருபக்கம்,வலிமை படத்தின் விசில் தீம் இசை சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,அஜித்தும்,ஹீமா குரோஷியும் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து கொண்டு ஸ்டைலாக நடந்து வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.