கலாக்காய் என்றோர் பழம் உள்ளது. அதனை ஆங்கிலத்தில் breadfruit என்று அழைப்பார்கள். தலைமுடியின் வளர்ச்சிக்கும் முகம் சிகப்பழகு பெறவும் இது நன்கு உதவுகிறது.
இந்த கலாக்காயில் (breadfruit) அதிகளவு ஆண்டிஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. கூடவே சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யும் தன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த கலாக்காயில் (breaffruit) அதிகளவு விற்றமின்களும் கனிமங்களும் அதிகளவு நிறைந்துள்ளது.
இதனால் உடல் மற்றும் சருமத்திற்கும் பல வகையான நன்மைகள் கிட்டுகிறது. குறிப்பாக இந்த கலாக்காயில் (breaffruit)அதிகளவு ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்கும் தன்மையை கொண்டிருப்பதால் வயது முதிர்விற்கான அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது.
அதனால் தான் வயது முதிர்வை தடுக்கும் கிரீம் மற்றும் ஜெல் போன்றவற்றில் கலாக்காய் (breadfruit) ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து கலாக்காய் (breadfruit) உண்பதால் பொலிவான சருமம் உறுதியாக கிடைக்கிறது.
அதேபோல சருமத்தில் ஏற்படுகின்ற நிற இழப்பை குறைக்க கலாக்காய் (breadfruit) முக்கிய பங்களிக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படுகின்ற கருந்திட்டுக்களை நீக்கி முகத்தை வெண்மையாக வைத்துக்கொள்கிறது. அதேபோல பருக்கள், கட்டிகள், மற்றும் கொப்புளங்கள் சிகிச்சைக்கு கலாக்காய் (breadfruit) பெரிதும் பயன்படுகிறது.
சருமத்தை புத்துணர்ச்சி தந்து நீர்ச்சத்தோடு வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடலில் தோல் மிகவும் மென்மையாக இருப்பதால் எளிதில் எந்த தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
ஆதலால் கலாக்காய் (breadfruit) நம் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி சருமத்தை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்கிறது. கலாக்காய் (breadfruit) சருமத்தை காப்பது மட்டுமன்றி கூந்தலின் வேர்களுக்கு நல்ல வலிமையையும் அளிக்கிறது.
மேலும் முடி உதிர்வு, முடி உடைதல் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகின்றது. கலாக்காயிலுள்ள (breadfruit) நிறைந்துள்ள புரதம் மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலம் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. கூந்தலின் வேர்க்கால்களும் வலிமை பெறுகின்றது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி கலாக்காய் (breadfruit) மூலம் பல நன்மைகளை அடையலாம் .