Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
29
சுவையான வாழைப்பூ வடை

SooriyanFM Gossip - சுவையான வாழைப்பூ வடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

431 Views
வாழைப்பூவில் உடலுக்கு தேவையான பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. 
இதன் மூலம் அல்சர் பிரச்சனை குறையும். இதயம் வலுவுடனும், உடல் மிகவும் சுறுசுறுப்புடனும் இருக்கிறது.

வாழைப்பூ வடை எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – ஒரு கப்,
கடலை பருப்பு – 200 கிராம்,
பெரிய வெங்காயம் – 1,
பூண்டு – 6 பல்,
காய்ந்த மிளகாய் – 3,
பெருங்காயத்தூள் – கால் கரண்டி,
சோம்பு – கால் கரண்டி,
இஞ்சி சிறிய துண்டு – 1,
உப்பு – முக்கால் கரண்டி,
எண்ணெய் – 200 கிராம்,
கருவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் 200 கிராம் கடலைப் பருப்பை இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவ வேண்டும். பின்னர் அதனுடன் கால் கரண்டி சோம்பு, 3 காய்ந்த மிளகாய் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கடலைப் பருப்பை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாழைப்பூவை உள்ளிருக்கும் காம்பு பகுதியை நீக்கிவிட்டு, தண்ணீரில் அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பெரிய வெங்காயம் ஒன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, பூண்டை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள கடலை மாவில் உப்பு கால், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வாழைப்பூ, இஞ்சி, பூண்டு மற்றும் கொத்தமல்லி, கருவேப்பிலை இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, வடை போல் தட்டி எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

பின்னர் வடை இரண்டு புறமும் நன்றாக சிவந்து வருமாறு வெந்ததும் வெளியே எடுக்க வேண்டும். இவ்வாறு கலந்து வைத்துள்ள மா அனைத்திலும் வடை சுட்டு எடுக்க வேண்டும்.

இதனை சுட சுட வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி கொடுத்து பாருங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top