Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
30
தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை / Best Home Remedy...

Sooriyan fm Gossip - தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை / Best Home Remedy...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

449 Views
முடி அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர எளிய வீட்டு வைத்தியம் Best Home Remedy  உங்களுக்கு நீளமானதும் அழகானதுமான கூந்தல் வளர வேண்டும்  என்ற ஆசைக்கு இங்கே உள்ள எண்ணெய்யை செய்து பயன் பெறுங்கள்.

அதற்கு தீர்வாக அமைகிறது   கேரட்  எண்ணெய் . இதனால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும்.  இந்த கேரட் எண்ணெய் தயாரிக்க  வேண்டியவை,
*இரண்டு அல்லது மூன்று கேரட்
*ஒலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேவையான  அளவு.
*கேரட் துருவி
*வடிகட்டி ஆகியனவாகும் .

முதலில் கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
துருவிய கேரட்டை ஒரு பாத்திரத்தில் இடவும்.  அதனுடன் உங்களுக்கு தேவையான அளவு ஒலிவ் எண்ணெயோ அல்லது தேங்காய் எண்ணெயோ கலந்து கொள்ளவும்.

கேரட் துருவல் மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும்.  அவ்வாறு நன்றாக ஊறியதும் கேரட் மிகவும் மென்மையாக மாறி அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறிவிடும். அப்போது அடுப்பை நிறுத்தி விட்டு ஆற விடவும்.

அடுத்துவரும் 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும். ஆறியவுடன் ஒரு எண்ணெய் வடிகட்டி பயன்படுத்தி எண்ணெயை வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதனை ஒரு கண்ணாடி குவளையினுள் ஊற்றி  இறுக்கமாக மூடி  வைக்கவும்.

குளிர்ந்த இடத்தில் அல்லது குளிர்சாதன பெட்டியில் (Refrigerater) கூட இதனை வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கேரட் எண்ணெய் தான் கூந்தலுக்கு பல நன்மைகளை தருகிறது.

தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன் இந்த எண்ணெயை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதனால் தலையில் இந்த எண்ணெய் ஊறி தலை முடிக்கு ஈரப்பதன் அளித்து அழகாக்குகிறது.

மேலும் முடி உதிர்வையும் தடுத்து கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி கேரட் எண்ணெய் மூலம் கூந்தல் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணுவோம்.

 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top