பொதுவாக சினிமாவில் இருக்கும் கலைஞர்கள் ஒரு துறையில் மட்டும் பயணிப்பது இல்லை. நடிகர்கள் பாடகர்கள் ஆவதும் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் ஆவதும், நடிகர்கள் ஆவதும் இப்போது நடந்து வருகிறது.
ஆனாலும் இதில் கமல்ஹாசன் சற்று வித்தியாசமானவர். பல தசாப்தங்களாக நடிப்பில் மட்டுமல்ல பல்வேறு துறைகளிலும் அவதானம் செலுத்தி வந்த ஓர் மகா கலைஞன் ஆவார்.
விஜய்சேதுபதி கூட ஓர் பொது நிகழ்வில் கமல்ஹாசனை பற்றி இவ்வாறு கூறியுள்ளார், "கமலஹாசன் அவர்கள் தனது படங்கள் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளார். ரசிகர்களுக்கு சிந்தனையூட்டியுள்ளார் " என்று.
இப்படி பல திறமைகளை கொண்ட கமல்ஹாசன் ஆரம்ப காலங்களில் புகைபிடிப்பதை பழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதை எப்படி நிறுத்தினார் என்று அவரே கூறியுள்ளார்.
ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் புகைபிடித்து கொண்டிருந்த போது அங்கிருந்த லைட் மேன் (Light Man) ஒருவர் சிகரெட்டை பிடுங்கி எறிந்து விட்டு "அடிபோடுவேன் உனக்கு.
இப்போது தான் உன்னை குழந்தையாக பார்த்தது போல் உள்ளது. இந்த வயதில் புகைப்பிடிக்கும் பழக்கம் தேவை தானா" என்று கேட்டு திட்டியுள்ளார். அப்போது ஒன்றை உணர்ந்தார் கமல். நிஜத்தில் மட்டுமல்ல. சினிமாவிலும் தான் வளர்ந்து விட்டார் என்றும் அதனால் இனி புகைபிடிப்பதில்லை என்றும் தீர்மானம் எடுத்துக் கொண்டார்.