குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் புகழ். இவர் தற்போது திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அஜித்தின் நடிப்பில் வெளியாக இருக்கும் ம் வலிமை திரைப்படத்திலும் புகழ் நடித்துள்ளார். அண்மையில் வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் அந்த டிரைலரில் புகழ் இடம் பெற்றிருந்ததை குறித்து அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் , அந்த டிரைலரில் அவர் இடம் பெற்றிருந்ததை குறித்து சமூக வலைத்தளத்தில் புகழ் கூறியதாவது, "அதில், அஜித் சார்.. இந்த சந்தோசத்தினை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. உங்களோடு பயணிக்கும் இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ் என்று பதிவிட்டு நடிகர் அஜித்துடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .