அதில் ஏராளமான இரசாயன கலவைகள் (chemical mixing ) கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு பலவிதமான தோல் சம்பந்தப்படட நோய்கள் வரக்கூடும். அதனால் அதனை தவிர்த்துக்கொள்வது நன்று . ஆகவே இப்போது இந்த குழந்தைகளுக்கான மசாஜ் எண்ணெயை வீட்டிலே தயாரிப்பது எவ்வாறு என்று இப்போது பார்ப்போம். இந்த மசாஜ் எண்ணெயை ஐந்து வயது வரையான குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். இதற்கு தேவையானவை
*மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ,
*மூன்று தேக்கரண்டி பாதம் தாம் எண்ணெய் ,
*இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய்,
*ஒரு தேக்கரண்டி நெய் ,
*இரண்டு தேக்கரண்டி றோஸ் வாட்டர்,
*ஒரு கைப்பிடி குங்குமப்பூ ,
*சிறிதளவு மஞ்சள் தூள்,
*சிறிதளவு மஞ்சள் தூள் .ஆகியனவாகும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் , பாதாம் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து மிதமாக சூடேற்றி கொள்ளவேண்டும். அடுத்து அடுப்பில் றோஸ் வாட்டர் , குங்கும பூ , மஞ்சள் தூள் , சந்தன தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருந்து ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி விடலாம்.
பின்னர் நன்கு ஆறியதும் வடிகட்டி கண்ணாடி குவளை ஒன்றினுள் இட்டு வைக்கலாம். இவ்வாறு தயாரித்த எண்ணெயை இரண்டு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
மேலும் இந்த எண்ணெயை குழந்தைகளுக்கு மசாஜ் செய்து இருபது நிமிடங்கள் கழித்து குளிப்பாட்ட வேண்டும். இதனை வாரத்தில் இருமுறையேனும் செய்து வர குழந்தைகளின் சருமம் அழகும், பொலிவும், மினுமினுப்பும் பெறும் .