அஜித் குமாரை வைத்து வலிமை படத்தை இயக்க இயக்குனர் வினோத் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13ம் திகதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
தமிழ் தவிர்த்து இந்தியிலும் வலிமை வெளியாகவிருக்கிறது.கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இதையடுத்து பொங்கல் ரிலீஸில் இருந்து பல படங்கள் பின்வாங்கிவிட்டன.ஆனால் எதுவாக இருந்தாலும் தியேட்டரில் வலிமையை காட்டுவது என்று வலிமை படக்குழு முடிவு செய்துவிட்டது.
வலிமை படத்தில் நடிக்க அஜித் குமாருக்கு ரூ. 70 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும்.வலிமையை இயக்க எச்.வினோத்துக்கு இந்திய பண மதிப்பில் ரூ. 4 கோடி சம்பளம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.