Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
வாழைக்காய் வறுவலை இப்படிச் செய்து பாருங்கள்.

Sooriyan Gossip - வாழைக்காய் வறுவலை இப்படிச் செய்து பாருங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

381 Views
வாழைக்காய் வறுவலை வீட்டில் இப்படிச் செய்து பாருங்கள் 
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 3,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை கரண்டி,
மஞ்சள் தூள் – கால் கரண்டி,
தனி மிளகாய் தூள் – அரை கரண்டி,
தனியாத் தூள் – முக்கால் கரண்டி,
கடுகு – அரை கரண்டி,
சோம்பு – அரை கரண்டி,
தேங்காய் – 2 சில்லு,
முந்திரி – 5,
உப்பு – முக்கால் கரண்டி,
எண்ணெய் – 5 கரண்டி,
பெருங்காயத் தூள் – அரை கரண்டி,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:
முதலில் வாழைக்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி வாழைக்காயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் கால் கரண்டி மஞ்சள் தூள், அரை கரண்டி இஞ்சி பூண்டு விழுது, கால் கரண்டி உப்பு இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.

பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின் தேங்காய் பொடியாக நறுக்கிக் கொண்டு, ஒரு மிக்ஸியில் சேர்க்க வேண்டும். பின்னர் தேங்காயுடன் கால் கரண்டி சோம்பு, 5 முந்திரி, 4 பச்சைமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து, இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 100 கிராம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கிளறி வைத்துள்ள வாழைக்காயை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து இந்த சூடான எண்ணெயில் இருந்து 5 கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மிளகாய்த் தூள், தனியாத் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். பின்னர் இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான வாழைக்காய் வறுவல் தயாராகிவிடும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top