சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் லாபஸ்சேன் முதலிடம் பிடித்து அசத்தியுளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 2ம் இடத்தில் உள்ளார்.
இதில், ரோகித் சர்மா ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறார். இதேவேளை இந்திய அணியின் விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் கே.எல்.ராகுல் துடுப்பாட்ட தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன 7வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 10வது இடத்திலும் உள்ளனர். இதேவேளை இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க T20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.