பெண்கள் அதிகம் சந்திக்கக்கூடிய ஓர் பிரச்சினை தான் கருவளையம் (Dark Circles). இந்த பிரச்சினை பலவகையான காரணங்களால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச்சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காமையினாலும் கண்களை சுற்றி கருவளையங்கள் (Dark Circles) ஏற்படுகிறது.
இந்த கருவளையம் வந்துவிடடால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். சரி இப்போது கருவளையம் நீங்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். முதலில் உருளைக்கிழங்கை எடுத்து அரைத்து அவற்றில் இருக்கும் சாற்றினை தனியாக வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் ஒரு துணியை எடுத்து அந்த சாற்றில் நனைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர எளிதில் கருவளையம் மறைந்து விடும்.
அதேபோல எலுமிச்சை மற்றும் தக்காளி ஆகிய இரண்டும் நமக்கு எளிதில் கிடைக்க கூடிய ஓர் இயற்கை பொருட்களாகும். எனவே இவற்றின் சாற்றினை ஒன்றாக கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பூசி வந்தால் கருவளையங்கள் குறைய தொடங்கி விடும். அதேபோல தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால் கருவளையங்கள் நாளடைவில் மறைய தொடங்கி விடும்.
அதேபோலவே பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து நன்கு கலந்து கருவளையம் இருக்கும் இடத்தில் பூசி 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவினால் கண்களை சுற்றி இருக்கும் கருவளையங்கள் நீங்கி விடும்.
அதேபோல அன்னாசி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து முகத்திற்கு பூசிவர கருவளையங்கள் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் முகத்தில் ஏற்படுகின்ற கருவளையங்கள் நீங்கி முகம் அழகாகும்.