தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிப்பு அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில்,தமிழ்த் திரையுலக பிரபலங்கள்,பல முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அண்மையில் நடிகை மீனா குடும்பத்தினை சேர்ந்த அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.அதேவேளை நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.இந்த விடயம் தொடர்பாக விஷ்ணு விஷால் தன்னுடைய சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.