குழந்தைகள் நம் வீட்டின் வரம் என்பார்கள். எனவே அந்த வரத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் நாம் கவனமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும்.
தற்போது பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளாததால் பிறக்கும் குழந்தைகளுக்கு எளிதாக கண்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும். இல்லையேல் குழந்தைகளின் கண்களின் அழகும் ஆரோக்கியமும் பாதிப்புற வாய்ப்பு ஏற்பட்டுவிடும். ஆதலால் பெண்கள் முதலில் தங்களது அழகில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ள வேண்டும்.
அதேபோல குறைந்த வயது திருமணங்கள் , நெருங்கிய உறவினற்குள் செய்கின்ற திருமணங்கள் போன்றவற்றால் ஏற்படுகின்ற சூழ்நிலைகளால் குழந்தைகளின் கண்கள் பல்வேறு வழிகளில் பாதிப்படைகிறது. பெண்கள் பொதுவாக 21 வயதிற்குள்ளும் 28 வயதிற்குள்ளும் குழந்தைகளை பிரசவிக்க வேண்டும் என்று கூறப்படுவதுண்டு. அத்துடன் மேலும் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு வகைகளையும் உட்கொள்ளவேண்டும்.
இந்த முறைகளை பின்பற்றினால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. குழந்தைகளுக்கு வண்ண மயமான விளையாட்டு பொருளை குழந்தையின் பார்வையில் படும்படி கட்டி தொங்க விடுங்கள் .அதன் மூலம் குழந்தைகளின் கண் அசைவையும் இயக்கத்தையும் கண்டறிய முடியும். இதன் மூலம் கண்கள் அழகான இசைவாக்கத்தையும் அடைகின்றன. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி குழந்தைகளின் கண்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்போம்.