தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நடிகை மீனா குடும்ப உறுப்பினர்கள்,நடிகை த்ரிஷா ,நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது ரஜினி முருகன் ,அண்ணாத்த திரைப்படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.