பலாப்பழம் சுவையானது மட்டுமல்ல! ஆரோக்கியமானதும் கூட!
சில பலாச்சுளைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல அற்புதங்கள் ஏற்படும். இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும். சாதாரணமாக பார்த்தால் இதிலுள்ள சர்க்கரையால் இதை Diabetes நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்பார்கள்.
ஆனால் அதே நேரத்தில் இதிலுள்ள மங்கனீஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
பலாப்பழம் நமக்கு ஆரோக்கியமான அழகான பொலிவு நிறைந்த சருமத்தை கொடுக்கிறது. இதிலுள்ள Antioxidantகள் சருமம் வயதாகுவதற்கு எதிராக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள், பொலிவின்மை போன்றவற்றை போக்கி ஆரோக்கியமான சருமத்தை தருகிறது. சரும சுருக்கங்களை போக்க இந்த பலாப்பழத்தை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பேஸ்ட் மாதிரி அரைத்து தினமும் முகத்தில் தடவி ஒரு 6 வாரத்திற்கு செய்யும் போது சுருக்கங்கள் மறைந்துவிடும்.
பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் செல்களின் எலக்ரோலைட் பொருட்களான சோடியத்தின் அளவை சமம்படுத்துகிறது. இதனால் உடலின் இரத்த அழுத்தம் சீராக மாறி இதய நோய்கள் மற்றும் இரத்த குழாய் பிரச்சினைகளை சரி செய்கிறது. பலாப்பழத்தில் உள்ள Vitamin A கண் பார்வைக்கு மிகவும் நல்லது.