மற்றும் கால்களை பராமரிப்பதற்கு கொடுப்பதில்லை. நமது முகத்திற்கு அடுத்த படியாக மற்றவர்களின் கண்களுக்கு தெரிவது கைகளும் கால்களும் தான் .
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அவயவங்களை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். நமக்கு முதுமைத்தோற்றத்தை வெளிப்படுத்துவது தோல் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் சிலருக்கு இளமையிலேயே சுருக்கங்கள் வந்து அவர்களை முதுமையாக காட்டும். ஆனால் இது ஒரு நிரந்தரமான பிரச்சினை கிடையாது. இந்த சுருக்கங்களை நாம் எளிமையாக இல்லாது செய்யலாம்.
இதற்கு தக்காளி ஒரு நல்ல தீர்வை தருகிறது. இது அனைவரது வீட்டிலும் பயன்படுத்த கூடிய ஒரு பொருளாகும். இதில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தோல் சுருக்கங்களை வர விடாது தடுப்பதுடன் சரும அழகை மேம்படுத்தவும் உதவுகிறது.
அதேபோல வாழைப்பழமும் நல்ல தீர்வை தருகிறது. வாழைப்பழத்தில் அதிகளவு இரும்புச்சத்தும் கனிமச்சத்தும் நிறைந்துள்ளது.
இந்த வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து கைகள் மற்றும் கால்களில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்துவர கைகள் மற்றும் கால்களிலுள்ள சுருக்கங்கள் மறைந்து விடும்.
அதேபோல ஒலிவ் எண்ணெய் பொதுவாக சருமத்திலுள்ள சுருக்கங்களை போக்க வல்லது. எனவே தினமும் ஒலிவ் எண்ணெய்யை கைகள் மற்றும் கால்களில் பூசி முப்பது நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை இல்லாது செய்யலாம். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இளமை ததும்பும் சருமத்தை பேணி வரலாம்.