மனிதனின் இன்றைய அறிவியல் விண்ணை தாண்டி மேலும் சில பால்வழி அண்டங்களை கடந்துள்ளது.
இதுவே இன்று வரை பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது போன்று பல வகையானவற்றை நாம் இன்று வரை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி உலக அளவில் உள்ள வானியலாளர்கள் சூரியனை விடவும் 10 மடங்கு பெரிதாக உள்ள ராட்சத சிவப்பு நட்சத்திரம் ஒன்றை கண்டறிந்தனர்.
பூமியில் இருந்து சுமார் 120 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்த அந்த நட்சத்திரம் வெடிக்க உள்ளதாகவும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
இந்த ராட்சத சிவப்பு நட்சத்திரத்தின் முடிவை பற்றி பல்வேறு கூறுகள் சொல்லப்படுகின்றன. மேலும் இதன் வெடிப்பானது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகத்தின் சுற்று பாதை வரை தாக்கி உள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.