Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
கொரோனா பாதிப்பால் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!

Sooriyan Gossip - கொரோனா பாதிப்பால் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

233 Views
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை அவுஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 24-ம் திகதி முதல் பிப்ரவரி 9-ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

முதல் போட்டி 30-ம் திகதி பெர்த்திலும், 2-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 2-ம் திகதி ஹோபர்ட்டிலும், கடைசி ஒருநாள் போட்டி 5-ம் திகதி சிட்னியிலும், 20 ஓவர் ஆட்டம் பிப்ரவரி 8-ம் திகதி கான்பராவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் விவாதித்து, முடிவெடுத்து இந்த தகவலை இன்று தெரிவித்தன.

இந்த போட்டி தொடர் எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அவுஸ்திரேலியா அணி இலங்கையுடன் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 11-ம் திகதி இந்த தொடர் தொடங்குகிறது. இந்த 20 ஓவர் தொடரும் ஒத்தி வைக்கப்படுமா? என்பது பின்னர் தெரியவரும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top