பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
இதைத்தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அடுத்ததாக எந்த கதாநாயகன் நடிக்க இருக்கிறார் என்று இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதன்படி இயக்குனர் சுகுமார் தனுஷை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.