Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
ரஷ்யா பேரழிவை சந்திக்கும் - ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை...!

SooriyanFM Gossip - ரஷ்யா பேரழிவை சந்திக்கும் - ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

203 Views
உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை
2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளபாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 1 இலட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

ரஷ்யா உக்ரைன் எல்லையில் மால்டோவா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு படையினர் மீது ரஷ்ய சிறப்பு படையினர் தாக்குதல் நடத்த உள்ளனர்.

இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என உக்ரைன் மீது ரஷ்யா குற்றஞ்சாட்ட உள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க உள்ளதாக சமீபத்தில் அமெரிக்கா தெரிவித்தது. இதை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று உக்ரைன் சென்றுள்ளார். ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரியின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்பட்டது.

இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.ஜோ பைடன் பேசியதாவது:-

உக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பு ரஷியா தான். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும். ரஷ்யாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர்.

600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன். உக்ரைனுக்குள் நுழைய ரஷ்ய படைகள் உண்மையான விளைவுகளையும் மிகப்பெரிய மனித உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிடும்.

உக்ரைன் எல்லை நோக்கி ரஷ்யா மேலும் முன்னேறி செல்லும் பட்சத்தில் அதிபர் புதின் (ரஷ்யா) தான் இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை பார்க்க நேரிடும்’ என்றார்.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் போர் ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top