இன்றைய இந்த பதிவில் வெந்தயம் முடி உதிர்வுக்கு எவ்வாறு தீர்வைத் தருகிறது என்று பார்க்கலாம்.
இப்போது ஆண் பெண் என்று இருபாலார்க்கும் முடி உதிர்வு என்பது பொதுவான பிரச்சினையாகிவிட்டது. பெண்களுக்கு அழகு நீளமான கூந்தல் இருப்பது தான்.
ஆனால் இப்போது கடைகளில் விற்பனையாகும் ஷாம்போ வகைகளை அதிகம் பயன்படுத்துவதாலும் இந்த முடி உதிர்வு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
செயற்கை முறை இல்லாமல் இயற்கை முறையில் முடி உதிர்வு பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வெந்தயம் தருகின்றது என்று இங்கு பார்க்கலாம். இதற்கு தேவையானவை
வெந்தயம்- பத்து தேக்கரண்டி
விற்றமின் 'ஈ' மாத்திரை- ஒன்று
விளக்கெண்ணெய்- ஒரு தேக்கரண்டி ஆகியனவாகும்.
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பத்து தேக்கரண்டி வெந்தயத்தினை ஐந்து அல்லது ஆறு மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவேண்டும். பின்னர் ஊறிய வெந்தயத்தினை மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவேண்டும்.
மிக்ஸியில் அரைத்த பின்னர் அதனை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். அதில் விற்றமின் 'ஈ' மாத்திரையை சேர்த்துக்கொள்ளவும்.
விற்றமின் ஈ மாத்திரை இல்லாதவர்கள் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணையை சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்க்கவும். குளிர்ச்சி தன்மை உடையவர்கள் இதனை தவிர்த்து கொள்வது நன்று.
இப்போது சேர்ந்த எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும். இதனை தனியாக ஒரு போத்தலில் இட்டு தலைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக இரவு நேரத்தில் இதனை பயன்படுத்த வேண்டும். காலையில் ஷாம்பு போட்டு தலையை கழுவி கொள்ளலாம்.
இம்முறையினை வாரத்தில் ஒரு முறையேனும் செய்துவர வேண்டும். முடி உதிர்வு பிரச்சினை இருக்காது. மேலும் வெந்தயம் கண் கழுத்து பகுதிகளுக்கு மிகவும் குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி முடி உதிர்தல் பிரச்சினைகளிலிருந்து முடியினை பாதுகாத்துக்கொள்வோம்.