நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை அனுவின் நடிப்பில் உருவாகியுள்ள மேற்படி திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான மனோபாலா, யோகிபாபு, பாஸ்கர், மதுமிதா, வனிதா என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் சாயிதர்ஷனின் இசையில் ஹரிச்சரண், சுவேதாமோகன், ரஞ்சித், வேல்முருகன், செந்தில், ராஜலக்ஸ்மி பூவையர் உள்ளிடடோர் பாடல்களை பாடியுள்ளனர். இதன் இசை வெளியீட்டு நிகழ்வு கடந்த பொங்கல் தினத்தன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே 'திமிறி எழு' என்ற திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ள சாயிதர்ஷன் மேலும் சில திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிய வருகிறது.
தென்னிந்திய திரையிசையில் சந்தித்துவரும் கே.சாயிதர்ஷனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.