சருமத்தில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க தினமும் எலுமிச்சை சாற்றை தேய்த்து வர முடி வளரும் தன்மையை இழந்து முகம் அழகு பெறும்.
முகத்திலுள்ள முடி நீங்க முட்டையுடன் வெள்ளை கருவை தனியாக எடுத்து அவற்றில் சோளமாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து அக்கலவையை முகத்தில் தடவி பின்பு காய்ந்தவுடன் அவற்றை கைகளால் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதாக கழன்று வந்துவிடும்.
கைகள் மற்றும் கால்களில் கருப்பு நிற முடிகள் அதிகமாக இருந்தால் தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை சாற்றில் தடவி சோப்பு போட்டு குளித்து வர கைகள் மற்றும் கால்களில் இருக்கும் கருப்பு நிற முடிகள் அகன்றுவிடும். அதேபோல ஆரஞ்சு பழத்தோல் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும் குணத்தை கொண்டுள்ளது.
ஆரஞ்சு பழத்தோலின் சாற்றை தோலில் தடவிக்கொள்ளும் போது தோல் பகுதி மென்மையாக மாறவும் மற்றும் கருப்பான கறைகள் மறையவும் கூடும். ஆரஞ்சு பழத்தோலை சருமத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கூட.
இவ் ஆரஞ்சு பழத்தோலை அதிக அழுத்தமில்லாமல் சருமத்தில் தடவுவதையும் மற்றும் எரிச்சலை தடுக்க ஆரஞ்சு பசையை பயன்படுத்துவதும் நன்று. சருமத்தை பளபளக்க செய்வதோடு மட்டுமல்லாமல் மென்மையாக மாற்றவும் இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சு பழத்தோல் உதவும்.
அதேபோல தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து உடம்பில் தேய்த்து சிறிது நேரம் கழித்து பயத்தமாவை தேய்த்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகவும் மிருதுவாகவும் காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கி மேனி அழகை பேணலாம்.