பெற்றோரின் மதுபாவனை மற்றும் அலட்சியத்தால் பிள்ளைகள் இரண்டின் வாழ்வு சீரழிந்துள்ள நிலை தொடர்பான காட்சியொன்று எமது செய்திப்பிரிவினரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தம்புள்ளை - சந்தையில் இரவு நேரமொன்றில் இக் காட்சி பதியப்பட்டுள்ளது.
இரு சிறு பெண் பிள்ளைகளுடன் சந்தையில் படுத்திருக்கும் தாயாரிடம் பொலிஸார் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர்.
இதன்போது அத்தாய் மது போதையில் இருக்கின்றமை தெரியவருகின்றது. மேலும் தந்தையும் போதையில் படுத்திருப்பது தெரியவருகின்றது.
போதைக்கு அடிமையாகி பிள்ளைகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகியிருக்கும் இப்பெற்றோர் தொடர்பில் என்ன சொல்வது?