இதில் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் உயிரிழந்தனர். தற்போது அவர்கள் 2 வது கட்ட போராட்டம் நாளை முதல் தொடங்கும் என்றும், போராட்டங்கள் அகிம்சை முறையிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக் படேல் கூறும் போது சூரத் நகரில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கப்படும். அஹிம்சை முறை யில் போராட்டத்தை நடத்து வோம். எங்களது இரண்டாம்கட்ட போராட்டம் ஒட்டுமொத்த நாட்டை யும் திரும்பி பார்க்கச் செய்யும். போராட்டம் குறித்த முழுமையான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.
இந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஹர்திக் படேல் குறித்த ஒரு காணொளி வட்ஸ்எப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஹர்திக் படேலும் அவரது 2 நண்பர்களும் இளம் பெண் ஒருவருடன் இருக்கும் சில நிமிடங்கள் ஓடும் குறித்த காணொளி அது. ஆனாலும் அந்த காணொளியில் இருப்பது அவர் இல்லை என ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.
எனினும் இக்காணொளி தொடர்பில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நன்றி: இந்திய உடகம்