President's speech at New Parliament - புதிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,013 Views
கடந்த பொது தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகியன முன்வைத்த கொள்கை பிரகடனங்களுக்கு இணங்க தமது மைத்திரி கொள்கை வகுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது உரையை நிகழ்த்திய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிரிவாத கொள்கைகளை கைவிட்டு இணக்கமுள்ள தேசிய அரசாங்கம் ஒன்றை தமது பதவி காலத்துக்குள் ஸ்தாபித்ததை இட்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமை தொடர்பான பூரண பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக இணக்க அரசாங்கத்தை யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியிலே தோற்றுவித்திருக்க வேண்டும்.
சகல மக்களுக்கிடையேயும் நல்லிணக்கணத்தை ஏற்படுத்திய வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் என்பவற்றை வெளிப்படுத்துவதே தமது அரசாங்கத்தின் அடிப்படை கொள்கை என்றும் அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரை நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்ற செயற்பாடுகள் நாளை மறுதினம் 9.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இன்று முற்பகல் 9.30க்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதி தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.