Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
சுடச் சுட சுவையான வெங்காய போண்டா

Sooriyan FM Gossip - சுடச் சுட சுவையான வெங்காய போண்டாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

289 Views
மாலை நேரத்தில் சுட சுட சுவையான  வெங்காய போண்டா செய்து ருசித்துப்பாருங்கள். 
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 4,
கடலை மாவு – அரை கப்,
அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி,
மிளகாய்த்தூள் – அரை மேசைக்கரண்டி,
பெருங்காயத்தூள் – கால் கரண்டி,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – 2 கொத்து,
சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காய போண்டா செய்வதற்கு முதலில் பெரிய வெங்காயம் நான்கு எடுத்து அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ரொம்பவும் மெல்லியதாக நீளமாக எல்லா வெங்காயத்தையும் நறுக்கி தனித்தனியாக கைகளால் உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

நறுக்கி வைத்த வெங்காயத்துடன் அரை கப் அளவிற்கு கடலை மா சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை மாவுடன் ஒரு கரண்டி அளவிற்கு அரிசி மாவு, ஒரு கரண்டி அளவிற்கு வெறும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பதார்த்தங்கள் செய்யும் பொழுது கண்டிப்பாக பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். கால் கரண்டி க்கும் குறைவாக கொஞ்சமாக பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை எடுத்து காம்பு நீக்கி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெங்காய போண்டா என்றாலே கருவேப்பிலையின் வாசம் நன்கு வீச வேண்டும். 2 கொத்து கறிவேப்பிலையை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து போண்டா மா பதத்திற்கு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகள் பிடிக்க வேண்டும்.

சிறு சிறு உருண்டைகளாக நன்கு அழுத்தம் கொடுத்து பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் உருண்டைகள் பிடித்த பின்பு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்து கொண்டு ஒவ்வொரு உருண்டைகளையும் போட்டு பொறுமையாக எல்லா புறமும் ஒன்று போல சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த வெங்காய போண்டா சுவையில் கொஞ்சமும் குறை இருக்காது. ஈஸியான மொறுமொரு வெங்காய போண்டா இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top