அழகை விரும்புவது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அத்தகைய அழகை மேலும் அதிகரிக்க பல்வேறு விதமான அழகுக்குறிப்பை பலர் பின்பற்றுவார்கள். அவ்வாறானவர்களுக்கு பயனுள்ள அழகுக்குறிப்புக்கள் சிலவற்றை இன்றைய இந்த பதிவில் பார்ப்போம்.
இதற்கு தேவையானவை
விதை நீக்கிய பேரீச்சம்பழம்- ஒன்று
உலர்ந்த திராட்சை பழம் - பத்து ஆகும்.
இவ்விரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த கலவையுடன் அரை தேக்கரண்டி பப்பாளி பழ கூழை கலந்து முகத்திற்கு பெக் போல போட்டுக் கொள்ளுங்கள். சுமார் இருபது நிமிடங்களின் பின்னர் முகத்தை கழுவலாம். இதன் மூலம் வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், சருமம் பளபளப்பாக மாறி விடும்.
அதேபோல, தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு பாத்திரத்தில் மிதமான அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு ஆகியவற்றை போட்டு பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்னர் தூரிகையினால் சுத்தம் செய்யவும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரலாம். பின்னர் பாதங்களை ஒரு மெல்லிய துணியினால் துடைத்து நல்லெண்ணையை மிருதுவாக சூடு செய்து காலில் பூசலாம். இதனால் பாதங்கள் அழகு பெறும். மேலும் கால் பாதத்தில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் பூசி வந்தால் வெடிப்பு இல்லாது போகும்.
மேலும் நகத்துக்கு கருமையான நிறம் மிக்க பூச்சு பூசுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடக்கூடும். அதனால் நகப்பூச்சு பூசுவதற்கு முன் 'நெயில் பேஸ்' போட்டு நகப்பூச்சு பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
மேலும், பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் தினமும் குளிக்கும்போது பாதத்தில் பீர்க்கங்காய் நார் கொண்டு ஐந்து நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
அதேபோல, கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் அதனை சீர் செய்ய எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பற்றுப்போட்டு வர நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகங்ககளுக்கு இடையில் மண் நிறைந்து காணப்படின் நல்லெண்ணையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணையில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் பூசவும். இரண்டு அல்லது மூன்று முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் இலகுவாக வந்து விடும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறலாம்.