இலங்கையில் முற்று முழுதாக படமாக்கப்பட்டு வெளியீட்டுக்காக தயார் நிலையில் இருக்கும் திரைப்படம் "வில்லியம் பாக்".
இப்படத்தை ரொஹான் நாராயணன் தயாரித்து இயக்கியிருக்கும் நிலையில்.தென்னிந்திய இசையமைப்பாளர் யுவன் கார்த்திக் இத்திரைப்பட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.இந்த திரைப்படத்தின் முதல் பாடலான "விழியின் வழியில் " பாடல் வெளியாகி தற்போது வரவேற்பை பெற்றுவருகிறது.
"வில்லியம் பாக்" திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் டாகி டக்லஸ், கமலினி ஜெயக்குமார் ,ஜொனி அட்ரியன் ,சந்துஜா ,சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சென்னையில் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில்.இந்த வருடத்தின் இறுதியில் படம் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் ஏனைய சில நாடுகளிலும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.