தளபதி விஜய் தனக்கென மிகப்பெரிய இரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் தளபதி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
![]()
தளபதி விஜய் எப்போதுமே தன்னுடைய இரசிகர்களுக்கு மரியாதை அளிப்பவர்.அந்தவகையில் தளபதி இரசிகர் ஒருவர் வரைந்த புகைப்படத்தினை தளத்தி விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த கஜேந்திரா எனும் இளைஞர் வாரிசு திரைப்படத்தின் புகைப்படத்தினை Digital Printing முறையில் மாற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.இந்நிலையில் இப்படம் ட்விட்டர் இல் வைரலாகியிருந்த நிலையில் தளபதி விஜய் இப்புகைப்படத்தினை தன்னுடைய ட்விட்டரில் Profile புகைப்படமாக பதிவேற்றியுள்ளார்.
இதை பார்த்த அந்த இளைஞன் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இதுவென பதிவிட்டுள்ளார்.தளபதியின் இன்னொரு இரசிகர் "நாம் அன்பை விதைப்போம்,மனிதம் சொல்லிக் கொடுப்போம்" என பதிவிட்டுள்ளார்.மேலும் பல இரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.