அனைவரையும் கவரும் வகையில் திரைப்படங்களை வழங்குவதில் இயக்குனர் அட்லீ தனித்துவம் வாய்ந்தவர்.
அவர் இயக்கிய திரைப்படங்களின் வசனங்கள் முதல் கொண்டு பாடல் காட்சிகளானது அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் வகையில் அமைந்திருக்கும்.'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிப்பில் , இயக்குனர் அட்லீ இயக்கும் திரைப்படம்தான் ஜவான்.அனிருத்தின் இசையமைப்பில் 2023 இல் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாரா நடிக்கிறார்.ஜவான் திரைப்படமானது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது.வெகு விரைவில் இயக்குனர் அட்லீயின் திரைப்படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க இருக்கின்றார் எனவும் அட்லீ சல்மான் கானை சந்தித்து திரைப்படம் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும்போது கதையில் விருப்பம் தெரிவித்து சம்மதம் கூறியதாகவும் ,குறித்த திரைப்படம் நகைச்சுவையினை அடிப்படையாகக்கொண்டு இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.'ஜவான்' திரைப்படத்தை பொறுத்தவரையில் ஷாருக்கானுக்கு ஜோடி நயன்தாரா அப்படியென்றால் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் சல்மானுக்கு ஜோடி யாராக இருக்கும் என அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.