Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை

sooriyanfm gossip - உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

148 Views
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் நிறுவனம் தொழில் நுட்பக்கோளாறை சரிசெய்துவிட்டோம் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் நேற்று திடீரென முடங்கியது.

இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியவில்லை என ட்விட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக தங்களுக்கு செய்தி வந்ததாக நேற்று புகாரளித்தனர். மேலும் சிலர் தங்களது கணக்குகளில் பாலோவர்ஸ் ( பின்தொடர்பவர்களின்) எண்ணிக்கை பெரிதும் குறைந்து வருவதாகவும் பெரிய வீழ்ச்சியை காட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அணுகுவதில் சிக்கல் இருந்தது.

சில இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்காலிகமாக மாறுதல் அடைந்திருக்கலாம்.

தொழில்நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணம். அதை சரிசெய்துவிட்டோம்' என்று அந்நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி சிறப்பாக இயங்க ஆரம்பித்துள்ள இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு தொழில்நுட்பக் கோளாறு வராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top