Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
5 நிமிடத்தில் செய்யலாம் வெண்டைக்காய் வறுவல்

sooriyanfm gossip - 5 நிமிடத்தில் செய்யலாம் வெண்டைக்காய் வறுவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
வெண்டைக்காயில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது.


வெண்டைக்காயை அவித்து சமையலில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் தீர்ந்துவிடும்.

அதோடு உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க வேண்டும் என்று எண்ணுவோர் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட வேண்டும், அவ்வாறு சாப்பிட்டால் கொழுப்புகள் வெளியேற்றப்படும்.

மேலும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் வெண்டைக்காய் உதவுகின்றது.

இப்போது வெண்டைக்காயை வைத்து வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 250 கிராம் கடலைமா- நான்கு மேசைக்கரண்டி துருவிய தேங்காய் - கொஞ்சம் கொத்தமல்லி - கொஞ்சம் பச்சைமிளகாய் - இரண்டு பூண்டு - 2 பல் வெங்காயம் - ஒன்று இஞ்சி - ஒரு துண்டு தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - 6 மேசைக்கரண்டி சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை - கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும்.

விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்த வெண்டைக்காயைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.

இப்போது சூப்பரான வெண்டைக்காய் வறுவல் ரெடி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top