இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவைப்பதற்காக , இறந்ததன் பின்னர் அடக்கம் செய்யப்படும் புதைகுழியில் , குறித்த நபரை உயிருடன் பிரேதபெட்டியினுள் வைத்து புதைத்துவிட்டு மீண்டும் வெளியே எடுக்கும் சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளனர்.
சைகிக் தெரபி என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறையின் மூலம் இந்த வியாதிகளினால் பாதிக்கப்பட்ட நோயாளியை உயிருடன் குழியில் புதைப்பதன் மூலமாக அவர் அந்த நோய்களை எதிர்த்துப் போராடக் கூடிய திறன் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
இதற்காக பெரிய ஒரு தொகையையும் அவர்கள் அறவிடுவதுடன் இது இலங்கை மதிப்பின்படி சுமார் ஒன்றரைக்கோடிக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதில் விசேட சலுகைகளும் உள்ளதுடன் குறைவான கட்டணத்தில் சில சேவைகளையும் அந்த நிறுவனம் ஒழுங்கு செய்துள்ளது. அதற்காக சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் அறவிடப்படுவதுடன் இந்த சேவைகளை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் நிறுவுனர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் மனிதனை உயிருடன் புதைப்பது முழுமையாகப் பாதுகாப்பானது என்றும் இதன் மூலம் அவர்கள் இறப்பின் அனுபவத்தைப் பெற்று மீண்டும் வாழும் எண்ணம் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படியான வினோதமான செயல்கள் மூலமாக அவர்களின் உள்ளக்கவலை, பயம், பதற்றம் போன்ற நோய்கள் குணமடைய வாய்ப்புள்ளதாகவும் இறந்த பின் புதைக்கும் தருணத்தை உயிருடன் உள்ள போதே அவர்கள் மேற்கொள்ளுகின்றனர். மேலும் இதன் மூலம் மனநோயாளிகளையும் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.