தமிழ் சினிமாவில் 3 ,வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது.
அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில்தான், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிக்கும் இப்படத்திற்கு ‘லால் சலாம்’ என்று தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.