நடிகை சமந்தா தற்போது யசோதா, சாகுந்தலம், விஜய் தேவரகொண்டாவுடன் குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதேவேளை, சமந்தாவின் யசோதா பட ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமந்தா மயோசைட்டிஸ் (Mayositis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.இந்த பதிவு சமந்தா ரசிகர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த திரையுலகையும் கவலையடையச் செய்தது.
எதிர்வரும் 15 ம் திகதி யசோதா திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தன்னுடைய உடல்நிலை குறித்து கண்கலங்கி பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. அந்தபேட்டியில் சமந்தா "சில நாட்கள் நல்லதாகவும் சில நாட்கள் மோசமானதாகவும் இருக்கும் என்றும், நான் நிச்சயம் இதிலிருந்து வெளிவருவேன்" என்றும் கூறியுள்ளார்.