நடிகர் விஷால் தற்போது காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் லத்தி.இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.இந்த நிலையில் லத்தி படத்தின் இரண்டாவது பாடல் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.இந்தப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா , ரஞ்சித் கோவிந்த் , ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்."ஊஞ்சல் மனம்" எனத் தொடங்கும் இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.