எமது வீட்டிலுள்ள பொருட்களை வைத்துக்கொண்டு இலகுவாக எமது சருமத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
முதலில் வெந்தயத்தை சுடுநீரில் ஊற வைத்து, மை போன்று அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சிறிதளவு தயிர் கலந்து தலையில் மெதுவாக பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளித்தால் பொடுகுத்தொல்லையிலிருந்து விடுபடலாம்.
மேலும் கோப்பி தூளை தலை முடியில் பூசி பத்து நிமிடங்கள் ஊறிய பின்னர் தலையை அலசினால், முடியானது அடர்த்தியாக இருக்கும்.
சிறிதளவு தக்காளிச்சாற்றினை மற்றும் பாதியாக வெட்டிய தக்காளியை எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி, பத்து நிமிடங்கள் ஊறிய பின்னர் கழுவி வர முகம் பொலிவாக இருக்கும்.
அதேபோல, உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவிய பின்னர் நன்கு துருவி அதன் சாற்றினை எடுத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி கோப்பி தூளை கலந்து வைத்து கொள்ளவும். பின்னர் சுத்தமான பஞ்சினை எடுத்து அதில் நனைத்து கண்களின் மீது மிருதுவாக வைத்து வர, கருவளையம் இலகுவாக மறைந்துவிடும்.
சுத்தமான தேனை முகத்தில் மிருதுவாக பூசி, பின்னர் இளஞ்சூடான நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்திலுள்ள சுருக்கங்கள் இலகுவாக நீங்கும்.
பாலில் 'லாக்டிக் அசிட் ' அதிகமாக உள்ளது. எமது கைகள் மற்றும் கால்கள் சொரசொரப்பாக இருப்பின், சிறிதளவு காய்ச்சாத பாலினை எமது கைகளிலும், கால்களிலும் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின்னர் கழுவ வேண்டும். இதனால் எமது சருமத்திலுள்ள வறட்சி நீங்கி, மிருதுவாக காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறலாம்.