Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
இப்படி ஒரு முறை செய்து பாருங்க 10 தோசை சாப்பிடலாம்.

sooriyanfm gossip - இப்படி ஒரு முறை செய்து பாருங்க 10 தோசை சாப்பிடலாம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

516 Views
பொதுவாக கோதுமை தோசை என்றாலே அதிகமானோருக்கு பிடிக்காது.
ஆனால் கோதுமையில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கோதுமை தோசையின் மூலம் நமக்கு கிடைக்கிறது.

பல்வேறு சத்துக்கள் நிறைந்த கோதுமை வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம் இன்று.

அத்தோடு சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரெசிபியை சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள் - கோதுமை மா - 2 கப் வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 5 சீரகம் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு ,தாளிக்க கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை - வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மா பதத்தில் கரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதை கரைத்து வைத்த மாவில் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மா எடுத்து கல்லில் கனமாக விட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சூப்பரான கோதுமை வெங்காய தோசை தயார்.

இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, புதினா சட்னி அருமையாக இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top