Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
கதைகளை திருடுவதாக மேடையில் கூறிய ராஜமௌலியின் தந்தை.

sooriyanfm gossip - கதைகளை திருடுவதாக மேடையில் கூறிய ராஜமௌலியின் தந்தை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

299 Views
இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய விடயம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திரபிரசாத் பல வெற்றித்திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
 
1996 ஆம் ஆண்டு வெளியான 'அர்தங்கி' என்ற திரைப்படத்தின் மூலம்  தெலுங்குத் திரையுலகில் இயக்குனராக  அறிமுகமானார்  விஜயேந்திர பிரசாத். 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ கிருஷ்ணா, 2011 ஆம் ஆண்டு வெளியான ராஜண்ணா, 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீவல்லி என  நான்கு திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். ஆனால், அவர் திரைக்கதையில் வெளியான படங்கள் ஏராளம்.
 
2011 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை,  மற்றும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவிக்கும் இவரே திரைக்கதை எழுதினார். அத்தோடு விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் துணை கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அதேவேளை நான் ஈ, பாகுபலி முதல் பாகம், பாகுபலி 2 ஆம் பாகம், RRR என ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த அனைத்து திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத் தான். 
 
இந்நிலையில் அவர் கோவாவில் நடந்த 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய போது  “நான் கதைகளை எழுதுவதில்லை. திருடுகிறேன். நம்மை சுற்றி கதைகள் உள்ளன. மகாபாரதம், ராமாயணம் போல.  அதுபோல நிஜ வாழ்க்கையிலும் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.” என பேசியுள்ளார். இந்த விடயம் தற்போது திரைத்துறையினரை மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top