Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
சரும அழகைப் பேணிப்பராமரிக்க உதவும் இஞ்சி!

Sooriyan FM Gossip - சரும அழகைப் பேணிப்பராமரிக்க உதவும் இஞ்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

288 Views
நம் சருமத்தைப் பேணிப்பாதுகாப்பதில் இஞ்சி முக்கிய பங்களிப்புச் செய்கின்றது. இஞ்சி தேநீர், இஞ்சி கோப்பி , இஞ்சி ஊறுகாய் என பல தேவைகளுக்கும் நாம் இஞ்சியைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும் நம் அழகை மேம்படுத்தவும் இஞ்சி பயன்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும். 
இரசாயனக் கலவைகள் கொண்ட கிரீம் வகைகளைப் பயன்படுத்துவதை விட இயற்கையான பொருட்களை சருமத்தின் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்துவது எப்போதும் சிறந்த பலனைத் தரும். எனவே இன்றைய அழகுக்குறிப்புகள் பகுதியில் சரும அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் பயன்படும் இஞ்சி பற்றிப் பார்ப்போம்.

சருமப் பராமரிப்புக்கு மட்டுமின்றி சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கும் பலவிதமான நன்மைகளை இஞ்சி தருகிறது. இஞ்சியில் அன்டி-செப்டிக் (Anti-Septic) பண்புகள் காணப்படுவதால் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினனைகளுக்கு இஞ்சி சிறந்த தீர்வளிக்கின்றது.

மேலும், இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிகம் உண்டு. இவை முகப்பருக்களை இல்லாது செய்வதுடன் முகப்பருக்களால் ஏற்படும் காயங்கள், தழும்புகள் போன்றவற்றையும் நீக்குகிறது. இஞ்சிச் சாற்றை முகத்தில் பூசி வருவதனால் முகப்பருக்கள் விரைவாக மறைந்துவிடும். இஞ்சிச் சாற்றை முகத்தில் பூசுவதனால் சரும எரிச்சல் ஏற்படும் என எண்ணினால் பன்னீர் கலந்தும் பூசி வரலாம்.

அதேபோல, இஞ்சியைப் பயன்படுத்துவதன் மூலம் இளவயதில், வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இஞ்சியில் அன்டி ஒக்ஸிடென்ட்கள் (Anti Oxident) உள்ளன. இவை சருமத்தில் முதிர்வைத் தடுக்க உதவுகின்றது. மேலும், இரத்த ஓட்டத்தை தூண்டுவதால் சருமத்தில் காணப்படக்கூடிய இறந்த செல்கள் நீங்கி சருமம் இளமையாக காணப்படுவதுடன் பளபளப்பாகவும் காணப்படும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top