Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
95 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு கண்டுபிடிப்பு !

Sooriyan FM Gossip - 95 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு கண்டுபிடிப்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
அவுஸ்திரேலியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஒரு குழுவினர் சமீபத்தில் வியக்கத்தக்க எலும்புக்கூடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் சுமார் 95 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த முதலை ஒன்றின் எலும்புக்கூட்டை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இருந்த போதிலும் குறித்த இந்த முதலையின் எலும்புக்கூடு , அறியப்படாத முதலை இனம் ஒன்றினுடையது என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை இந்த முதலை இறப்பதற்கு முன்பதாக ஒரு முழுமையான மற்றும் சரியாக அறிந்து கொள்ள முடியாத உணவு ஒன்றை உட்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள டைனோசர்கள் அருங்காட்சியகத்தின் ஆய்வாளரான மேட் வைட் என்பவரின் தலைமையில் இயங்கிய குழுவொன்றினால் இடம்பெற்ற ஆராய்ச்சியின் போது இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த இடத்தில் ஏற்கனவே டைனோசர் எலும்புகளை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டு அடி நீளமுள்ள இந்த முதலை இனம் "கான்ஃப்ராக்டோசஸ் சௌரோக்டோனோஸ்" என ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகின்றன.

X- கதிர்கள் மற்றும் CT ஸ்கேன்கள் மற்றும் 3D கணினி போனறவைகளை பயன்படுத்தி அவற்றின் எலும்புகளைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்ததாகவும் ஆராய்ச்சி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த முதலையின் படிமங்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள டைனோசர்ஸ் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த செய்தி வெளியானதில் இருந்து, இது தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த முதலையை பார்க்க விரும்புவோரும் நேரடியாக இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top