இதையடுத்து, இந்த திரைப்படத்தைப் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.
தற்போது எல்லா மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் போன்ற பலரும் பாராட்டினர். இந்த நிலையில், 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காந்தாரா திரைப்படமானது கேரளாவில் ரூ.19.2 கோடியையும், வட இந்தியாவில் ரூ.96 கோடியையும், தெலுங்கில் ரூ.60 கோடியையும், தமிழ்நாட்டில் 12.70 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், கர்நாடகாவில் மட்டும் ரூ.168.5 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் ரூ.44 கோடியை வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.