தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும்,வில்லனாக அரவிந்த் சாமியும் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
மேலும்,இந்தத் திரைப்படத்தில் சரத்குமார்,வென்னேலா கிஷோர்,பிரேம்ஜி,சம்பத் ராஜ்,பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,இப்படம் தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.இந்நிலையில்,நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'NC 22' படக்குழு அவருக்கு பரிசாக 'NC 22' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பவற்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் 'NC 22' படத்திற்கு 'கஸ்டடி' என படக்குழு பெயர் வைத்திருக்கிறது.நாக சைதன்யாவின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் 'கஸ்டடி' என்ற டைட்டிலும்,படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.