Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
சுவையான மிளகு ஆட்டு ஈரல் வறுவல் !

sooriyanfm gossip - சுவையான மிளகு ஆட்டு ஈரல் வறுவல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

302 Views
ஈரல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதனுடைய மென்மைக்கும், ருசிக்கும் அடிமையாகாதவர்கள் இங்கு யாருமே இருக்க முடியாது. சிலர் ஈரலை சுட்டு சாப்பிடுவார்கள், சிலர் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள், எதுவாக இருந்தாலும் ஈரல் தனி ருசிதான்.

இதில் முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உயிர்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன.

குறைந்த அளவில் முழுமையான சத்துக்கள் கொடுக்கக்கூடிய ஒரே ஒரு அசைவம் என்றால் அது ஆட்டு ஈரல் மட்டும்தான்.

இன்று காரமும் மணமும் கொண்ட 'மிளகு ஆட்டு ஈரல் வறுவல்' செய்வது எவ்வாறு என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் - ஈரல் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 வர மிளகாய் - 5 மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - இரண்டு கொத்து கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை - சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்துக் கிளறவும்.

அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.

பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.
Make a Comment
Make a Comment





Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top