Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
அடர்த்தியான கூந்தலுக்கு உதவும் அசத்தலான குறிப்புக்கள்.

Sooriyan FM Gossip - அடர்த்தியான கூந்தலுக்கு உதவும் அசத்தலான குறிப்புக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

398 Views
பெண்களின் கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருப்பது இக்காலத்தில் அரிதாகவே காணப்படுகின்றது. போதுமான தூக்கமின்மை, மன உளைச்சல், தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் பெண்களின் கூந்தல் வலுவிழந்து காணப்படுகின்றது.  எனவே இன்றைய பதிவில் பெண்கள் தமது கூந்தலை அடர்த்தியாகவும், கருமையாகவும் பேணிப்பாராமரிக்க சில குறிப்புக்களைப் பார்ப்போம். 
கூந்தல் பராமரிப்பிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் அவசியமாகும். வாரத்தில் 3 நாட்களாவது தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை பூசுவது நன்று. தேங்காய் எண்ணெய் கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், கூந்தலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். தேங்காய் எண்ணெயை மிதமாக சூடேற்றி கூந்தலில் மசாஜ் செய்வதனால் கூந்தல் கருமையாக வளரும்.

கறிவேப்பிலையை வெயிலில் நன்கு காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து சுமார் ஒரு வாரம் வரை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வாரம் கடந்த பின் இதனை தலையில் பூசி மசாஜ் செய்தால், கூந்தல் கருமையாக இருக்கும்.

செம்பருத்தி எண்ணெயை அவ்வப்போது கூந்தலில் பூசி வர, கூந்தல் வலுவாக இருக்கும். செம்பருத்தி எண்ணெயைப் பெற இயலாதவர்கள், சுத்தமான தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதனுடன் செம்பருத்திப் பூக்களை சேர்த்து ஊற வைத்து, தினமும் குளிப்பதற்கு முன்னர் இந்த எண்ணெயை கூந்தலில் பூசி மசாஜ் செய்த பின் குளிக்கலாம். இது கூந்தலை கருமையாக வைத்துக்கொள்ளும். அதேபோல நெல்லிக்காயின் சாற்றைப் பிழிந்து கூந்தலுக்கு பூசுவதன் மூலமாகவும் கருமையான கூந்தலைப் பெற முடியும்.

தலையில் பொடுகு அதிகமாக உள்ளவர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு சிறந்த தீர்வைத் தருகின்றது. குளிப்பதற்கு அரைமணிநேரத்திற்கு முன்னர் எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் பூசிய பின்னர் குளிப்பதனால் இலகுவாக பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இதுதவிர குளிக்கும் போது சீயக்காய் கொண்டு குளிப்பதன் மூலமாகவும் பொடுகு பிரச்சனைக்கு தீர்வைப் பெறலாம். எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது கூந்தலைப் பாதுகாப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top