கடந்த வாரம் பெருவின் தலைநகரான லிமாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட , LATAM விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஓடுபாதையில் செல்லும்போது அங்கிருந்த தீயணைப்பு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானம் தீப்பிடித்துக்கொண்டது.
இருந்த போதிலும் அதிஷ்டவசமாக, விமானத்திலிருந்த 120 பயணிகளும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர். இருப்பினும், இந்த விபத்தில் ஓடுபாதையில் கடமையில் இருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நடந்து சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தில் பயணித்த ஒரு தம்பதியினர், எந்த காயமும் இல்லாமல் விமானத்தில் இருந்து தப்பித்ததுடன் தீயினால் சேதமடைந்த விமானத்துடன் செல்ஃபி எடுத்து அதை தங்களது சமூக வலைத்தளத்தில் "வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கும் போது." என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளனர்.
குறித்த இந்த செல்ஃபி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.