Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் முட்டை மஞ்சூரியன் கிரேவி

sooriyanfm gossip - வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் முட்டை மஞ்சூரியன் கிரேவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

361 Views
நாவில் எச்சி ஊறும் முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதனை எளிமையாக மற்றும் வேகமாகவும் உங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த முட்டை மஞ்சூரியனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் - முட்டை - 3 மைதா மா - 3 தேக்கரண்டி சோள மா - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி மிளகு சீரகப்பொடி - 1 தேக்கரண்டி வெங்காயம் , குடைமிளகாய் - தலா 1 சிவப்பு மிளகாய் சோஸ் - 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் சோஸ் - 1 தேக்கரண்டி சோயா சோஸ் - 1 தேக்கரண்டி தக்காளி சோஸ் - 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி செய்முறை - வெங்காயம், குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகு சீரகப்பொடி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒருகிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றிக் கொள்ளவும்.

இதனை குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் கிண்ணத்தை வைத்து 10 முதல் 12 நிமிடம் வரை வேக வைக்கவும்.முட்டை வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மா, சோள மா, மிளகாய் தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மா பதத்தில் கலந்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் துண்டுகளாக நறுக்கிய முட்டைகளை மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து அரை பாகம் வேகும் வரை வதக்கவும். அடுத்து அதில் சிறிதளவு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சிவப்பு மிளகாய் சோஸ் , பச்சைமிளகாய் சோஸ் , சோயா சோஸ் , தக்காளி சோஸ், கரைத்து வைத்த சோள மாவில் தண்ணீரை ஊற்றவேண்டும்.

அத்துடன் உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறவும். கிரேவி நன்கு திக்கான பதம் வந்ததும், வெட்டிவைத்துள்ள வெங்காயங்களை தூவி இறக்கினால் சூப்பரான முட்டை மஞ்சூரியன் கிரேவி தயார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top