Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையிலிருந்து விடுபட எளிய வழிமுறை!

SooriyanFM Gossip - உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையிலிருந்து விடுபட எளிய வழிமுறை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,023 Views
உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றிமையாத ஒன்று. அதிலும் பீட்ரூட் எமது உடல் நலத்திற்கு அதிகளவிலான நன்மைகளை வழங்கக்கூடியது. இதில் மெக்னீசியம், பொஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், கல்சியம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றவர்கள். பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் அல்லது அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

பீட்ரூட்டை தினமும் சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பு சிறப்பாகத் தொழிற்படும். அதுமட்டுமின்றி சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புக்களில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் துணைபுரிகின்றது.

பீட்ரூட் சாற்றில் கலோரிகள் மிகக் குறைவு அத்துடன் கொழுப்புக்கள் கிடையாது. எனவே அதிக உடல் எடையினால் சிரமப்படுபவர்கள் தினமும் பீட்ரூட் சாற்றைக் குடித்து வருவதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத Cholesterolஐ குறைத்து உடல் எடையை சீராக பராமரித்துக்கொள்ள முடியும்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான இரும்புச்சத்து மற்றும் AntiOxident போன்ற ஏராளமான சத்துக்கள் பீட்ரூட்டில் அதிகளவில் உள்ளடங்கியிருக்கின்றன. எனவே எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட் துணைபுரிகின்றது.

பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் சிறந்த முகப்பொலிவை பெற்றுக்கொள்ள முடியும் அத்துடன் முடி உதிர்வையும் தடுத்துக்கொள்ள முடியும்.

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், Vitamin12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே உடலில் இரத்தணுக்களின் அளவினை சீராக பராமரிக்க வேண்டுமாயின் பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வருவது சிறந்தது.

பீட்ரூட் சாற்றினைக் குடிப்பதன் மூலம் புற்றுநோய் பாதிப்பிலிருந்து நாங்கள் எளிதில் விடுபட முடியும். பலவித ஆரோக்கிய நலன்களை எமது உடலுக்கு வழங்கக்கூடிய பீட்ரூட்டினை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் நிறைவான ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top